மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - நீதிமன்றம் அதிரடி

Published : Nov 20, 2025, 12:13 PM IST

மாநில சட்டப்பேரவையால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை காலவரம்பின்றி நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், ஆளுநர் செயல்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும் என எச்சரித்துள்ளது.

PREV
15
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நீதிமன்றத்திடம் 14 விழக்க கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

25
ஆளுநரின் பணி என்ன..?

நீதிமன்ற தீர்ப்பில், “மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், எந்த பதிலும் தெரிவிக்காமலும் ஆளுநர்களால் கிடப்பில் போட முடியாது. கால வரம்பு இல்லாமல் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட அதிகாரம் கிடையாது. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பும் பட்சத்தில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அல்லது மசோதா தொடர்பாக விளக்கம் கேட்ட வேண்டும், அல்லது குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தான் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

35
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே அதிகாரம்

ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும், அமைச்சரவையும் மட்டுமே மாநிலத்தில் முதன்மையாக இருக்க முடியும். ஆளுநர்கள் மாநில அரசு அனுப்பும் மசோதாக்களில் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அதனை அரசுடன் பேசி இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைமுறைகளை மேற்கொள்ளக் கூடாது. ஒரு மசோதா சட்டமாக மாறும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும்.

45
காலக்கெடு விதிக்க முடியாது

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு நீதிமன்றம் காலக்கெடு வழங்க முடியாது. ஆளுநர்களுக்கு நீதிமன்றத்தால் அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும். அந்தந்த மசோதாவிற்கு ஏற்றாற்போல் ஆளுநர்களே சரியான காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்.

55
ஆளுநர் செயல்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும்..

ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஆளுநர் செயல்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும். காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு மசோதாவை கிடப்பில் வைத்திருந்தால் நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்தலாம். ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்கும் போது நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories