ஜெ. பெயரில் பல திட்டங்கள்.. நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு சிவி சண்முகத்தை வெளுத்தெடுத்த திமுக வழக்கறிஞர்

Published : Aug 06, 2025, 01:29 PM ISTUpdated : Aug 06, 2025, 01:44 PM IST

அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயர் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உயர்நீதிமன்ற தடையை ரத்து செய்ததுடன் மனுதாரருக்கு அபராதமும் விதித்துள்ளது.

PREV
15

தமிழக அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் என பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் திட்டங்களில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம் பி சிவி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் விளம்பரங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

25

குறிப்பாக, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் முதலமைச்சரின் பெயர் இடம்பெறுவதை எதிர்த்து, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம், அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவது தவறு என்று கூறி, இத்தடையை விதித்தது. இருப்பினும், முதலமைச்சரின் புகைப்படம் இடம்பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

35

இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது உங்களுடன் ஸ்டாலின்' நலம் காக்கும் மருத்துவம் திட்டங்களில் முதல்வரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அதிமுக எம்பி சி.வி. சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவி்ட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின்' நலம் காக்கும் மருத்துவம் திட்டங்களில் முதல்வரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த அனுமதி கோரும் திமுக. தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

45

தமிழ்நாடு அரசு, திமுக, அதிமுக வாதங்களை பரிசீலித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்படவில்லை என்றும் குறிப்பிட்டு, உங்களுடன் ஸ்டாலின்' நலம் காக்கும் மருத்துவம் திட்டங்களில் முதல்வரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், அதிமுக எம்பி சி.வி. சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவி்ட்டுள்ளது. முன்னதாக இந்த விசாரணையின் போது அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரை குறிக்கும் வகையில் அம்மா என்கிற பெயரில் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளதை திமுக சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பட்டியலிட்டார்.

55

அந்த வகையில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா வாட்டர் பாட்டில் என வாசித்தார். இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகிள் அரசியல் சண்டையை நீதிமன்றத்திற்குள் வெளியே வைய்யுங்கள், நீதிமன்றத்திற்கு கொண்டுவராதீர்கள் என குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்த அதிமுக எம்பி சிவி சண்முகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள் ஒரு வார காலத்தில் செலுத்தவில்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என தெரிவித்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories