ஸ்டாலின் அடித்த மாஸ்டர் ஸ்ட்ரோக்! ராமதாஸ், ஓபிஎஸ் சந்திப்பால் கப், சிப்புனு இருக்கும் கூட்டணி கட்சிகள்

Published : Aug 06, 2025, 01:25 PM IST

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் அண்மையில் ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா உள்ளிட்டோரை சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு கூட்டணிக்கான அச்சாரமா அல்லது கூட்டணியில் உள்ள கட்சியினரின் வாயை அடைக்கவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

PREV
14
ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தனது கூட்டணியை உறுதி செய்வதில் அதிமுக தற்போது வரை தடுமாற்றத்துடனே இருந்து வருகிறது. அதிமுக, பாஜக தவிர்த்து வேறு யார் யாரெல்லாம் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்று அதிமுக.வினர் கூட உறுதியாக சொல்ல முடியாது. அந்த நிலையில் தான் அதிமுக உள்ளது.

ஆனால், திமுக.வோ கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட வெற்றிக் கூட்டணியை தற்போது வரைத் தொடர்ந்து வருகிறது. கூட்டணி தற்போது வரை கலையாமல் இருப்பது திமுக.வின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

24
நலம் விசாரித்த தலைவர்கள்

இது ஒருபுறம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன் லேசான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சந்தித்து சென்றனர்.

இவர்கள் மூவரும் முதல்வரின் உடல் நலனை விசாரிக்கவே வந்து சென்றதாக சொல்லப்பட்டாலும் இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை உற்று பார்க்க வேண்டி உள்ளது. ஏனெனில் திமுக கூட்டணி தற்போது வரை உறுதியாக இருந்தாலும் கடந்த சில தினங்களாகவே வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் எங்கள் பலத்திற்கு ஏற்றவாறு அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே பேசி தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்னர்.

34
சீட்டு ஒதுக்கீடு

கூட்டணி கட்சிகள் கேட்கும் படி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அதிக இடங்களை ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் திமுக தனித்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படும். மாறாக கூட்டணி ஆட்சியை நோக்கி திமுக தள்ளப்படும். இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது அதே போன்று கூட்டணி கட்சி தலைவர்களின் வாயையும் அடைக்க வேண்டும் என்பதற்காக மாற்று கட்சி தலைவர்களின் வருகையை உற்சாகத்தோடு வரவேற்பதாக சொல்லப்படுகிறது.

மாற்று கட்சி தலைவர்களின் வருகையை ஆதரிப்பதால் நீங்கள் இத்தனை சீட்டு வேண்டும், இந்த தொகுதி வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கேட்காதீர்கள். மாறாக நீங்கள் வேறு கூட்டணிக்கு செல்லவேண்டும் என்றாலும் கூட சென்றுவிடுங்கள். உங்களுக்கு மாற்றாக கூட்டணியில் இணைய பிற கட்சிகள் ஆப்ஷனாக இருக்கின்றன என கூட்டணி கட்சிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் இது அமைகிறது.

44
அச்சுறுத்தும் திமுக

மேலும் புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்துடனும் ஓபிஎஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்காக சென்றுவிடக் கூடாது. உங்களுக்காக பாரம்பரிய கட்சியான நாங்கள் இருக்கின்றேம். கூட்டணி தேவைப்பட்டால் எங்களுடன் வந்துவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதற்காகவும் இந்த நிகழ்வுகள் மேற்கொள்ப்படுவதாக அரசியல் மேற்பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories