CV Shanmugam: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக பெரும்பான்மைக்கு குறைவான இடங்களைப் பெற்றுள்ளதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் ஆதரவளித்த போதிலும், அதிமுகவில் ஒரு தரப்பு தவெக-வை ஆதரிக்க முயல்வதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகிறது. இதனால் தவெக யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் ஆதரவு கொடுத்த நிலையில், தவெக ஆட்சியமைக்க இன்னும் 6 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
26
அழைப்பு விடுக்காத ஆளுநர்
விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை தவெக தலைவர் விஜய் நாடியுள்ளார். ஆனால் அவர்களிடம் இதுவரை எந்த விதமான பதிலும் வரவில்லை. மற்றொரு புறம் பாமக மற்றும் அமமுகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. அப்படி இருந்த போதிலும் தவெக தலைவர் விஜய் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய விஜய், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரினார். ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்த பிறகும் பெருபான்மை இல்லாததால் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
36
தவெக ஆதரவு தெரிவிக்கும் சி.வி.சண்முகம்
இதனிடையே அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தவெகவிற்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் பங்கேற்கலாம் என கூறி வருகிறார். இதுதொடர்பாக சி.வி.சண்முகத்துடன் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிமுக மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் உருவானது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: அதிமுக மிகப் பெரிய இயக்கம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தவெகவிற்கு எந்த சூழலிலும் ஆதரவு அளிக்காது என்பதை இபிஎஸ் அனுமதியுடன் கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
56
சொகுசு விடுதியில் 40 எம்எல்ஏக்கள்
இந்த பரபரப்புக்கு மத்தியில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்பாட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி பூராணங்குப்பத்தில் உள்ள சொகுசு விடுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அருள்மொழி தேவன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக தவெகவை ஆதரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
66
திமுக- அதிமுக கூட்டணி
இதனிடையே அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாக எதிரும் புதிருமாக இருந்த திமுக- அதிமுக இணைந்து புதிய ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.