எக்ஸாம் ஹாலில் ஆசிரியர் செய்ற வேலையா இது! அலறிய 12ம் வகுப்பு மாணவிகள்! நடந்தது என்ன?
திருப்பூரில் 12ம் வகுப்பு தேர்வு அறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரில் 12ம் வகுப்பு தேர்வு அறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் திருப்பூர் வெங்கமேடு வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் அதே பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகளும், தனியார் பள்ளியை சேர்ந்வர்களும் தேர்வு எழுத வந்திருந்தனர். ஒரு வகுப்பறையில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவிகள் மற்றும் 5 மாணவர்கள் என மொத்தம் 11 பேர் தேர்வு எழுதினர்.
அங்கு அம்மாபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமார் (34) என்பவர் தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த தேர்வு அறையில் 6 மாணவிகள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது பிட் எதுவும் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வது போல் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருமணமான 9 மாதத்தில் தற்கொலை செய்றார்னா! ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு மோசமானது பாருங்க? சொல்வது யார் தெரியுமா?
இதையடுத்து தேர்வு முடிந்ததும் மாணவிகள் அவசரம், அவசரமாக வெளியே வந்த மாணவிகள் தங்களது பெற்றோர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம் பாலியல் சீண்டல் தொடர்பாக புகார் அளித்தனர். இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தேர்வு தொடங்கியதில் இருந்தே ஆசிரியர் சம்பத்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி! செல்போனுக்கு சார்ஜ் போட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு! நடந்தது என்ன?
இதில் மாணவிகளிடம் ஆசிரியர் சம்பத்குமார் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து சம்பத்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.