யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் - யார் யார் தெரியுமா?

First Published May 24, 2023, 11:19 AM IST

3 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீச் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் இந்த தேர்வு தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியானது.

இதில் வெற்றிபெற்ற 2,529 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த ஜனவரி மாதம் முதல் நடப்பு மே மாதம் வரை நடைபெற்றது. இந்த நிலையில் இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று www.upsc.gov.in எனும் இணையதளத்தில் வெளியானது.

இந்த யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் ஜகநாதனின் மகள் சத்ரியா கவின் 169 ஆவது இடத்தையும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்தின் மகள் ஈசானி 290 ஆவது இடத்தையும், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் 361 ஆவது இடத்தையும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

click me!