அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?

Published : May 23, 2023, 02:50 PM ISTUpdated : May 23, 2023, 02:51 PM IST

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

PREV
14
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?

வெப்ப சலனம் காரணமாக, 23.05.2023 முதல் 27.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

24

சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 - 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

34

25.05.2023 முதல் 27.05.2023 வரை மன்னார் வளைகுடா மற்றும் தமிழக - ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும்இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

44

26.05.2023 மற்றும் 27.05.2023 வரை இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories