பொதுவாக டாஸ்மாக் மதுபான கடைகள் குடியரசு தினம்,காந்தி ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினங்களில் விடுமுறை அளிக்கப்படுவதுண்டு. சில நேரங்களில் உள்ளூர் பொறுத்தவரை விடுமுறை அளிக்கப்படும்.
மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 22-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை மற்றும் பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி 1-ன் படி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள 53 டாஸ்மாக் கடைகளும், பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.