மத்திய அரசு 'சாகர்மாலா' என்ற திட்டத்தின் கீழ், நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் விட்டு, நாடு விட்டு நாடு செல்ல, சுற்றுலா கப்பல்கள் இயக்க, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்குவது தொடர்பாக கார்டிலியா என்ற நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் எம்பிரஸ் என்ற பயணியர் கப்பல், சென்னையில் இருந்து ஜூன் 5ம் தேதி முதல், இலங்கைக்கு இயக்கப்படுகிறது.
இந்த கப்பல் ஆனது அம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் துறை, யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருக்கிறது. மூன்று நாள் பேக்கேஜில் பயணிக்க, தம்பதிக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.