வெப்பத்தை போக்க வருகிறார் வருண பகவான்.! தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை - எங்கெல்லாம் தெரியுமா?

First Published May 19, 2023, 8:08 AM IST

சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக வெயிலின் வெப்பம் கடுமையாக இருப்பதால் மக்களால் தாங்க முடியவில்லை.

மோக்கா புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடதிசையில் நகர்ந்து சென்ற போது தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதத்தின் அளவு குறைந்துவிட்டது. தற்போது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளது.

வறண்ட காற்றால் ஏற்படும் வெப்பம் அழுத்தம் காரணமாக அசவுகரியமான சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது என்று வானிலை மையம் கூறியது.

இந்த நிலையில் மகிழ்ச்சியான செய்தியை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

நாளை முதல் 22ஆம் தேதி வரை  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க..8 ஆண்டுகளில் இல்லாத வெயில்.. இன்னும் 2 நாள் கவனம்! தமிழக மக்களை எச்சரித்த வானிலை மையம்

click me!