இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பயிற்சி ஆசிரியர்கள் கலைசாரதி, இனியவர்மன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தது அதிலுள்ள அந்தரங்க புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் இருவரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதில் அந்தரங்க புகைப்படங்கள் அவர்களது செல்போனில் பகிர்ந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ், கணித ஆசிரியை ஹேமா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.