அதாவது விஜய்யின் வாகனம் வரும் வழித்தடத்தில் எந்த இடத்திலும் வரவேற்பு அளிக்கக்கூடாது. இந்நிகழ்ச்சியை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த அனுமதி, பிரசாரத்தின் போது விஜய்யுடன் முக்கிய நபர்கள் மட்டுமே வாகனத்தில் இருக்க வேண்டும். மேலும் தவெக தொண்டர்கள் 10,000 பேர், பொதுமக்கள் 25,000 பேர் பங்கேற்க உள்ளனர். பிரசார கூட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மைதானம் முழுவதும் மொத்தம் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.