Delta Weatherman: தமிழ்நாட்டில் எலினோ காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், டெல்டா வெதர்மேன் அரசியல் தலைவர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதமே வெயில் வாட்டி வதைத்து வந்தது. பின்னர் மார்ச் மாதத்தில் உக்கிரமானதை அடுத்து கோடை வெயில் தொடங்கிய விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். உச்சி வெயில் மண்டையை பொளந்தாலும் அவ்வப்போது ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வந்தது.
26
ஏப்ரல் 23 சட்டமன்ற தேர்தல்
இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதை அடுத்து வெயில் அதிகரித்து காணப்படுப்படுகிறது. இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு டெல்டா வெதர்மேன் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
36
அரசியல் தலைவர்களுக்கு வேண்டுகோள்
இதுதொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் ஜனநாயகத் திருவிழா சூடு பிடித்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் ஒரு வானிலை ஆய்வாளராக திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக கட்சி தலைவர் விஜய் அவர்களுக்கும் முக்கியமான வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன்.
நாம் முன்பே குறிப்பிட்டவாறு இந்த ஆண்டு எலினோ உருவாகக்கூடிய ஆண்டாக இருப்பதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த ஆண்டு நமக்கு ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கும் இந்த சூழலில் அடுத்து ஒரு சில வாரங்களில் தேர்தல் இருக்கக்கூடிய சூழலில் கட்சி பொதுக் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் கட்சித் தலைவர்கள் தயவு செய்து காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
56
பிரச்சார பொதுக்கூட்டங்கள்
குறிப்பாக நண்பகல் 11 முதல் 3.30 மணி இடைப்பட்ட நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். வெப்பம் உச்சபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் மேல் பதிவாக வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல ஒரு சமவெளி பகுதிகளில் அதாவது திறந்தவெளி பகுதியில் மரங்கள் இல்லாத பகுதியில் அதிக கூட்டம் கூடும்போது. அங்கு இருக்கக்கூடிய உணர்வும் வெப்பநிலை என்பது அதிகரித்து காணப்படும். அந்த தருணத்தில் குறிப்பிட்ட இடத்தில் அதிகப்படியான மக்கள் கூட்டம் கூடினால் அவர்களுக்கு எளிதாக உடம்பில் நீர்சத்து குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வெயில் நேரத்தில் பக்கவாதங்கள் ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்படுவதற்கும் மயக்கம் அடைந்தால் எளிதாக கடந்து போய் விடுகிறோம். தண்ணீர் தாகம் தானே என்று நாம் எளிதாக கடந்து போகிறோம். டிஹைட்ரேட் அவர்களிடம் நீர்ச்சத்து முழுமையாக குறைந்து மயக்கம் அடைந்தால் அந்த தருணத்தில் தண்ணீர் கொடுத்தால் கூட காப்பாற்று என்பது கடினம்.
66
நீர்ச்சத்து குறைபாடு
தவிர்க்க வேண்டிய சூழல் இருக்கும்போது அதை தவிர்க்காமல் விபத்து ஏற்படுகிறது என்று குறிப்பிட முடியாது. அதன் காரணமாக காலை 11 மணிக்கு முன்பாக அல்லது 3.30 மணிக்கு பின்பாக தங்களின் பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் பிரச்சாரங்களை வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக அதையும் மீறி கட்சித் தலைவர் பொதுக்கூட்டத்தை மேற்கொள்ளும் போது வந்திருக்கக்கூடிய தொண்டர்களுக்கு தேவையான நிழலுக்கோ, அங்கு இருக்கக்கூடியவர்களுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது எந்த விதத்திலும் எந்த கட்சியையும் குறிப்பிட்டு பதிவிடவில்லை. தற்போது இருக்கக்கூடிய சூழல் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கூட்டங்கள் கூடும் போது அந்த இடங்களில் வறட்சியான நிலைக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.