ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 23 ரூபாய் கட்டணம்.! பாதிக்கப்படும் மகளிர்- சீறும் ஸ்டாலின்

Published : Mar 30, 2025, 11:43 AM IST

ஏடிஎம் பயன்பாட்டிற்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இது ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் உடையவர்களை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல் என கருத்து தெரிவித்துள்ளார்.

PREV
14
ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 23 ரூபாய் கட்டணம்.! பாதிக்கப்படும் மகளிர்- சீறும் ஸ்டாலின்

ATM fee hike RBI announcement : நவீன யுகத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை மக்கள் சந்தித்து வருகிறார்கள். அதன் படி டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் பணம் இல்லாத பண பரிவர்த்தனையை செயல்படுத்த மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. அந்த வகையில் ஒரே நிமிடத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் மின்சார கட்டணம், வரி செலுத்ததல், பொருட்கள் வாங்குவது என கைக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்த போதும் அத்தியாவசிய தேவைக்காக கிராம்ப்புரம் முதல் நகரங்களில் உள்ள மக்கள் தங்களின் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்து வருகிறார்கள்.

24

ஏடிஎம் கட்டணம் உயர்கிறது

சொந்த வங்கியின் ஏடிஎம் மூலம் ஒரு மாதத்தில் 5 முறை பணம் எடுத்தால் எந்த வித கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை, 6வது முறை எடுக்கும் போது 23 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஏடிஎம் மூலம் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால்  இனிமேல் 23 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

34
mk stalin

இது தான் டிஜிட்டல் இந்தியாவா.?

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள். அடுத்து என்ன? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

44

பாதிப்படையும் பொதுமக்கள்

இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும். ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள்,

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்.
 

Read more Photos on
click me!

Recommended Stories