சென்னையிலிருந்து கொழும்பு புறப்படத் தயாரான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், ஓடுபாதையில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சமயோசிதத்தால் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டதால், 262 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
24
தொழில் நுட்ப கோளாறு
இந்த சம்பவத்திற்கு பிறகு அடுத்தடுத்து விமானங்கள் விபத்தில் சிக்குவதும் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதுமாக இருந்து வருகிறது. இதனால் விமானத்தில் செல்லும் பயணிகள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற ஒரு வித அச்சத்துடனே பயணிக்கின்றனர்.
34
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்
இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 262 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 262 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை கொழும்புக்கு புறப்பட்ட தயாராக இருந்தது. இந்த விமானம் ஓடுபாதைக்கு கொண்டு வரப்பட்ட போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்தார் விமானி. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது.
விமானம் பறப்பதற்கு முன்பே இயந்திர கோளாறு முன்கூட்டியே கண்டு பிடிக்கப்பட்டதால் 262 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை பழுது பார்க்க முடியாததால் இலங்கையில் இருந்து மாற்று விமானம் சென்னை வந்தது. இதனையடுத்து 12 மணி நேரம் காத்திருந்த பயணிகள் மாற்று விமானத்தில் சென்றனர்.