ரேஷன் கார்டில் மாற்றம் செய்யனுமா.? இந்த சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க - தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

Published : Feb 06, 2025, 07:00 AM IST

ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற சேவைகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். 

PREV
15
ரேஷன் கார்டில் மாற்றம் செய்யனுமா.? இந்த சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க - தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
ரேஷன் கார்டில் மாற்றம் செய்யனுமா.? இந்த சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க - தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

ஏழை மற்றும் நடுத்தரவருக்கு மக்கள் பயன்பெறும் வகையில்  மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக நியாய விலை கடைகளில் மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  அரிசி பருப்பு, பாமாயில், சக்கரை, உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.  தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.இந்த நிலையில் ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே மகளிர் உரிமைத்தகையானது வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் புதிய ரேஷன் கார்டை பெறுவதற்காக விண்ணப்பித்து காத்துள்ளனர். 
 

25
magalir urimai thogai

சுமார் 2.80 லட்சம் மக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களில் விண்ணப்பங்களானது சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே ரேஷன் அட்டை உள்ளவர்கள் தங்களது குடும்ப அட்டையில் புதிதாக பெயரை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும், முகவரி மாற்றம் செய்வதற்கும், சூப்பரான வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

35

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என  அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 08.02.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

45

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

55

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories