மஹாசிவராத்திரிக்கு கோயிலுக்கு போகனுமா.? பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை

Published : Feb 23, 2025, 08:47 AM IST

மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்புத்தூர், திருநெல்வேலி உட்பட பல ஊர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகிறது.

PREV
14
மஹாசிவராத்திரிக்கு கோயிலுக்கு போகனுமா.? பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை
மஹாசிவராத்திரிக்கு கோயிலுக்கு போகனுமா.? பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை

தமிழக போக்குவரத்து கழகத்தின் சார்பில் விஷேச நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய நாட்கள் மட்டுமின்றி வார விடுமுறை, பள்ளி விடுமறை நாட்களையொட்டி சென்னை மட்டுமின்று பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயங்கி வருகிறது. அதன் படி மஹா சிவராத்திரியையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

24
மஹாசிவராத்திரி கொண்டாட்டம்

மஹாசிவராத்திரியையொட்டி அன்றைய தினம் இரவு முழுவதும் மக்கள் கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவார்கள். எனவே இதற்காக பல்வேறு கோயில்களுக்கு மக்கள் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து சிறப்பு பேருந்து தொடர்பாக போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் பிரசித்தி பெற்ற மஹாசிவராத்திரி திருநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி தொலைதூர பயணிகள் கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கோட்டை, மதுரை. திருச்செந்தூர்.

34
சிறப்பு பேருந்து அறிவிப்பு

காரைக்குடி, திண்டுக்கல், தேனி, என பல்வேறு இடங்களுக்கு பக்தர்கள் சென்று வர ஏதுவாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் 25/02/2025 அன்று சென்னை பெங்களூரிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 26/02/2025 அன்று மேற்கண்ட இடங்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

44
முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்

இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் Instc official app. ஆகிய இணையதளங்களின் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories