இபிஎஸ் கூட்டத்தை விட 10 மடங்கு கூட்டத்தை கூட்டனும்.! தேனியில் கெத்து காட்டனும்- ஓபிஎஸ் அணி உறுதி

Published : Feb 23, 2025, 07:05 AM ISTUpdated : Feb 23, 2025, 07:11 AM IST

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு நீடிக்கிறது. தேனியில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்த, ஓபிஎஸ் அணியும் போட்டி கூட்டம் அறிவித்துள்ளது.

PREV
15
இபிஎஸ் கூட்டத்தை விட 10 மடங்கு கூட்டத்தை கூட்டனும்.! தேனியில் கெத்து காட்டனும்- ஓபிஎஸ் அணி உறுதி
இபிஎஸ் கூட்டத்தை விட 10 மடங்கு கூட்டத்தை கூட்டனும்.! தேனியில் கெத்து காட்டனும்

அதிமுக பொதுசெயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுவில் தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற தொடங்கிய போட்டி 8 வருடங்களை கடந்தும் முடியவில்லை, ஒவ்வொரு தலைவர்களும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இபிஎஸ்- ஓபிஎஸ்- சசிகலா- டிடிவி தினகரன் இது மட்டுமில்லாமல் அதிமுக ஒற்றுமை அணி என தனி அணியும் உருவாகியுள்ளது. இதனால் வாக்குகள் சிதறி எதிர் அணிகள் எளிதில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

25
அதிமுகவில் தொடரும் மோதல்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கட்சி என்ற பெயர் பெற்ற அதிமுக நாட்கள் செல்ல, செல்ல டெபாசிட் வாங்கவே திணறி வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் வேதனையில் உள்ளனர். எப்போது தலைவர்கள் ஈகோவை விட்டு விட்டு ஒன்றினைவார்கள் என காத்துள்ளனர். அந்த வகையில் எந்த வித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயார் என ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் தற்போது அதிமுக பொதுச்செயலாளராக உள்ள இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் அதிமுகவின் எதிர்காலத்திற்கு முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது.

35
ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டி கூட்டம்

இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. அதன் படி ஓபிஎஸ் கோட்டையாக உள்ள தேனியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதனால் அதிமுக வட்டாரமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பல ஆயிரம் பேரை கூட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு போட்டியாக ஓபிஎஸ் அணியும் போட்டி கூட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனியல் நடைபெற்றது.  
 

45
அதிமுகவை சூழ்ந்த இருள்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எம்ஜிஆர் ஆன்மாவும், அம்மாவின் ஆன்மாவும் அதிமுக இயக்கத்தை காப்பாற்றும், என்னை முதல்வராகிய இந்த இயக்கத்திற்கு நன்றி கடனுக்காக உண்மையாக உழைக்க வேண்டும் என்று உழைக்கிறேன் என தெரிவித்தார்.  தொண்டர்களாகிய உங்களுடைய எண்ணமும், செயலும் கூடிய விரைவில் வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம்  நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

55
10 மடங்கு கூட்டத்தை கூட்டனும்

முன்னதாக பேசிய  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்,  அதிமுகவை இருள் சூழ்ந்துள்ளது.  அந்த இருள் விலகி விடியல் வர அதிமுக நிர்வாகிகளாகிய உங்களிடமே உள்ளது. மேலும் வரும் 2 தேதி தேனியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவின் பொதுக்கூட்டத்தில் கூடும் கூட்டத்தை காட்டிலும் பத்து மடங்கு அதிகம் கூட்டம் கூட்ட வேண்டும் என ஓ.பி.ரவீந்திரநாத் நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories