சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்டி பெட்டியாக வரும் தக்காளி, மூட்டை மூட்டையாக வெங்காயம்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
உணவிற்காகத்தான் மனிதன் ஓடி ஓடி உழைத்து வருகிறான். அந்த வகையில் சமையல் ருசியாக இருக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் நினைப்பார்கள். அந்த வகையில் சமையலில் முக்கிய பங்கு வகிப்பது காய்கறிகள். காய்கறிகள் இல்லாமல் உணவு சமைப்பது சாத்தியம் இல்லாத ஓன்று. அதன் படி ரசம், சாம்பார், மீன் குழம்பு, பிரியாணி உன எது சமைத்தாலும் காய்கறிகள் இல்லாமல் சமைக்க முடியாது. அதிலும் தக்காளி வெங்காயம் இல்லாமல் சமையல் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
25
உச்சத்தை தொட்ட காய்கறிகள் விலை
எனவே காய்கறி சந்தையில் மற்ற காய்கறிகளை விட இல்லத்தரசிகள் தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்குவார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் தக்காளி, வெங்காயம் விலை உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ 100 ரூபாயை கடந்தது. இதனால் இல்லத்தரசிகள் தக்காளி மற்றும் வெங்காயம் வாங்க முடியாமல் திணறினர்.
வாங்கினாலும் அரைக்கிலோ ஒரு கிலோ என வாங்கும் நிலை உருவானது. எனவே எப்போது காய்கறிகளின் விலை குறயும் என மக்கள் காத்திருந்தனர். அந்த வகையில் அதற்கு ஏற்றார் போல் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து காரிப் பருவ காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
35
தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரிப்பு
இதனால் காய்கறிகளின் விலையானது சரசரவென குறைந்துள்ளது. இதன் படி ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 50 ரூபாய்க்கு 3 கிலோ தக்காளியை இல்லத்தரசிகள் வாங்குகிறார்கள். இதே போல வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது 3 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என பொதுமக்கள் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்குகிறார்கள்.
45
பச்சை காய்கறின் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் 20 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 12 முதல் 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
55
முருங்கைக்காய் விலை என்ன.?
அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும்,
கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகிறது