உ.பி.யில் இயக்குவதற்காக தமிழ்நாட்டில் 10 ரயில்களில் பெட்டிகளை குறைத்த ரயில்வே; பயணிகள் ஷாக்!

First Published | Dec 22, 2024, 10:48 AM IST

உத்தரபிரதேசத்தின் மகா கும்பமேளாவுக்கு இயக்குவதற்காக தமிழ்நாட்டில் 10 ரயில்களில் பெட்டிகளை குறைத்த தெற்கு ரயில்வே குறைத்துள்ளது.

MEMU Trains

மகா கும்பமேளா திருவிழா

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா திருவிழா வரும் ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் பல லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரபிரதேசம் செல்வார்கள் என்பதால் நாடு முழுவதும் இருந்து அங்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இயக்குவதற்காக தமிழ்நாட்டில் 10 ரயில்களின் பெட்டிகளை குறைத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நடக்க உள்ளதால் கூடுதல் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகள் தேவைப்படுகிறது.
 

Southern Railway

ரயில்களில் பெட்டிகள் குறைப்பு 

இதனால், குறுகிய தூரத்தில் இயக்கப்படும் 'மெமு' வகை மின்சார ரயில்களில் பெட்டிகள் தற்காலிகமாக குறைத்து இயக்கப்பட உள்ளன. அதன்படி 10 ரயில்களில் தற்போதுள்ள 12 பெட்டிகளில் இருந்து தலா 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்படும். அதன்படி எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புதுச்சேரி செல்லும் ரயிலில் நேற்று முதல் 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்பட்டது.

இதேபோல, மதியம் 2.55 மணிக்கு புறப்படும் புதுச்சேரி -திருப்பதி ரயில், காலை 4.30 மணிக்கு புறப்படும் திருப்பதி-புதுச்சேரி ரயில், மதியம் 3.50 மணிக்கு புறப்படும் புதுச்சேரி-சென்னை எழும்பூர் ரயில்களில் தலா 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் ரயில், 

பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே

Tap to resize

Tamilnadu Trains

சென்னை‍-திருவண்ணாமலை ரயில் 

விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் ரயில்களில் வரும் 26ம் தேதி முதல் பெட்டிகள் குறைத்து இயக்கப்படும்.  

மேலும் தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு விழுப்புரம் செல்லும் ரயில், திருவண்ணாமலையில் இருந்து காலை 4 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில்களில் 27ம் தேதி முதல் தலா 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்பட உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரையில் இது தொடரும்'' என்று கூறப்பட்டுள்ளது.

Southern Railway Reduced Coaches

பயணிகள் அதிர்ச்சி 

ஏற்கெனவே மேற்கண்ட ரயில்களில் போதுமான பெட்டிகள் இல்லாததால் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கியபடி பயணம் செய்து வருகின்றனர். இப்போது உத்தரபிரதேசத்தில் இயக்குவதற்காக இருக்கும் பெட்டிகளையும் தெற்கு ரயில்வே குறைத்திருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

100 ரூபாய்க்கு ஹோட்டல் ரூம்.. ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்!

Latest Videos

click me!