மூணாறுக்கு 3 நாள் டூர்.! கட்டணம் இவ்வளவு தானா.? தமிழ்நாடு சுற்றுலா துறை அசத்தல் அறிவிப்பு

First Published | Dec 22, 2024, 9:07 AM IST

தமிழக சுற்றுலா துறை மூணாறுக்கு புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மூன்று நாட்கள் சுற்றுலாவில் மூணாறின் முக்கிய இடங்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tamilnadu tour

இயற்கையை தேடும் மக்கள்

நாளுக்கு நாள் மாறி வரும் நவீன உலகத்தில், எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இளைப்பாற நேரம் கிடைக்காதா என ஏங்கி தவித்து வருகிறார்கள். வாகனத்தின் சத்தம், சுற்று சூழல் மாசு, உயர்ந்த கட்டிடங்கள் என இயந்திர வாழ்க்கை வாழும் மக்களுக்கு அமைதியான சூழ்நிலை, தூய்மையான காற்று, தலையை தொட்டுச்செல்லும் மேகங்கள், உயர்ந்து நிற்கும் மரங்கள், குளுமையான காற்று அனுபவிக்க மாட்டோமா என ஆசைப்படுகிறார்கள். அப்படி இரண்டு நாள் விடுமுறை கிடைத்தாலோ வெளியூருக்கு நண்பர்கள் அல்லது உறவினர்களோடு பறந்து சென்று விடுவார்கள். 
 

munnar tour

சுற்றுலா திட்டங்கள்

அப்படி வெளியூர் செல்லும் விரும்பும் மக்கள் எப்படி செல்வது, எங்கே தங்குவது, எந்த இடத்தை சுற்றிப்பார்ப்பது என தெரியாமல் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது தமிழக சுற்றுலா துறை, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பல்வேறு சுற்றுலாக்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆன்மிக சுற்றுலா என தமிழகத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலா திட்டமும், மலைப்பகுதியான ஊட்டி, கொடைக்கானல் என குளுமையான இடங்களுக்கு சுற்றுலாவும் சிறப்பாக செயப்படுத்தப்படுகிறது.
 

Tap to resize

munnar double decker

மூணாறுக்கு சுற்றுலா

இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறுக்கு சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலா துறை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,  இந்தியாவின் கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒரு நகரம் மூணாறு ஆகும்.  தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட மலைகளால் சூழப்பட்டுள்ளது மூணாறு. காலப்போக்கில் அழிந்துவரும் மலை ஆடுகள்,  நீலகிரி தாரின் வாழ்விடமான எரவிகுளம் தேசியப் பூங்கா, லக்கம் நீர்வீழ்ச்சிகள், மற்றும் 2,695 மீ உயரமுள்ள ஆனைமுடி சிகரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

munnar tour

மூணாறுக்கு 3 நாட்கள் டூர்

இந்த இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்கும் வகையில் சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா 7100 ரூபாய் கட்டணத்தில் 3 நாள் சுற்றுலா செயல்படுத்தப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த பயணமானது திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு சென்னையை வந்தடைகிறது.

இந்த சுற்றுலாவானது  சென்னையில் இருந்து புறப்பட்டு மறையூர் சென்று சேர்கிறது. இதனையடுத்து இரவிகுளம் - வனவிலங்கு சரணாலயம், மூணாறில் உள்ள முக்கிய இடங்கள்,  எக்கோ பாயிண்ட், மேட்டுப்பாளையம் புளூசம் பார்க் ஆகிய இடங்களை பார்வையிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

Latest Videos

click me!