Train Ticket Cancelling
விஷேச நாட்கள்- சிறப்பு ரயில்
ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்கள் படிப்பை முடித்து வேலை தேடி வருகிறார்கள். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வெளியூருக்கு வேலை தேடி வருபவர்களுக்கு சென்னையானது இருக்க இடமும் கொடுத்து, பிழைக்க வழியும் தேடி கொடுக்கிறது. அந்த வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டு வந்தவர்கள் தொடர் விடுமுறை, விஷேச நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
பொங்கல், தீபாவளி, புத்தாண்டு பண்டிகைக்கு உறவினர்களை பார்க்க பல லட்சம் பேர் சென்னையில் இருந்து மட்டுமே செல்வார்கள். இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
new year special train
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்
இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து வருகிற 24ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதையொட்டி சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதன் படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண 06039 / 06040 தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கும். கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டிசம்பர் 24 மற்றும் 31ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில் இயக்கப்படுகிறது.
train reservation
தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்
இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1ஆம் தேதியில் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இரண்டு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளும், 4 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியும், 10 இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது தாம்பரம் இருந்து புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி சென்று சேருகிறது.
special train
சிறப்பு ரயில் அறிவிப்பு
இதே போல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து (ரயில்எண் 06005 / 06006) கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 23ஆம் தேதியும் 30ஆம் தேதி இயக்கப்படுகிறது இதே போல மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், சேலம், ஈரோடு, திருச்சூர், கோட்டயம் வழியாக கொச்சுவேலி சென்று சேர்கிறது
Train
கும்பமேளா சிறப்பு ரயில்
அடுத்ததாக கும்பமேளாவையொட்டி கன்னியாகுமரியில் இருந்து கயா விற்கும் சிறப்புரயில் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து கயாவிற்கு ஜனவரி 6 மற்றும் 20 ஆம் தேதிகளிலும் மறுமார்க்கத்தில் ஜனவரி 9 மற்றும் 23ஆம் தேதிகளில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது