senthil balaji
அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒரு வருடத்துக்கு மேலான நீண்ட சட்டப்போராட்டத்தை அடுத்து 471 நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் இருந்து வந்த வேகத்திலேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்
Senthil balaji News
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரி, அவரால் பாதிக்கப்பட்டதாக கூறும் ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
Supreme Court
இந்த வழக்கில் ஓய்.பாலாஜி தரப்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதாவது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதிவு செய்துள்ள வழக்குகளின் விசாரணை நீர்த்துபோகச் செய்யும் வகையில் 2000 பேரை புதிதாக சேர்த்து தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் ஜாமீனில் வெளியே வந்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று முன்வைக்கப்பட்டது.
Supreme Court Rejected
இந்நிலையில் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.