வெளுத்து வாங்கிய கனமழை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழையும் கொட்டியது.
சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் ஓரளவு பரவாலாக மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர்வரத்து அதிவேகமாக உயர்ந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.