அசத்தும் அரசு பள்ளிகள்.! கொண்டாட்டத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்
பள்ளி கல்வியும் தமிழக அரசும்
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்குஏற்றார் போல தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப வசதியோடு பாடங்கள் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கப்படுகிறது. அதன் படி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் வகையில் முக்கிய திட்டத்தை தமிழக அரசு தமிழகம் முழுவதும் செயல்படுத்தி அசத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
school student
மாணவர்களின் கல்வி வளர்ச்சி
அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு தற்போதைய தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு எண்ணிய தொழில்நுட்ப விரிவாக்கத்தை (Digital Technology) முன்னெடுப்பு நிகழ்வாக கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தற்போது வருகிறது.
புத்தகங்கள் மற்றும் கரும்பலகைகள் வாயிலாக நடைபெற்ற கற்றல் கற்பித்தல் நிகழ்வின் ஓர் உச்சமாக உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவலைப் பெற்று பாடப்பொருள்களை எளிதாகப் புரிந்துகொள்ளவும்,
school smart class
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
பெற்ற தகவல்களைத் தக்கவைத்து கொள்ளவும் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்கவும் 22,931 திறன் மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 11,76,452 மாணவர்கள் பயனடையும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக அரியலூர், கடலூர், நாகப்பட்டினம். சேலம், திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 493 அரசு தொடக்கப் பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் 14.6.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
school education
உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்
இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிகு அமைக்கும் பணி நிறைவு பெற்றது. இறுதி கட்டமாக, சென்னை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளில் 27.01.2025 அன்று ஒக்கியம் துரைபாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 22931வது திறன்மிகு வகுப்பறையினை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் நிறுவப்பட்டது.
இதை போன்று அரசு பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi- Tech Labs) ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
tamilnadu education
43,89,382 மாணவர்கள் பயன்
இவ்விருதிட்டங்களின் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் 43,89,382 மாணவர்கள் பயனடைய உள்ளனர். இவ்வாறு அரசு பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக கற்றல் கற்பித்தல் பணியானது எளிமையாகவும். எளிதில் மாணவர்களை கவரக்கூடியதாகவும். பாடப்புத்தகங்களில் உள்ள பாடப்பொருட்கள் மற்றும் அதன் தொடர்புடைய விவரங்களை ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாக பார்த்தும் கேட்டும் விரைந்து புரிந்து கொள்ளக் கூடியதாகவும் அமைய உள்ளது.
school students smart class
மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பு
இத்தகைய திறன்மிகு வகுப்பறைகள் குழந்தைகள் நேய வகுப்பறைகளாக மாற்றியமைப்பதன் வாயிலாக ஆசிரியர்கள் இனி வரும் காலங்களில் ஆசிரியர்களாக மட்டுமின்றி ஒரு எதுவாளராகவும் செயல்படுவார்கள். இதன் வாயிலாக மாணவர்களின் கற்றல் திறன்கள் கற்றல் விளைவுகளை அடையும் திறன்கள் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.