நாளை மருதமலை கோயில் கும்பாபிஷேகம்.! இன்று மாயமான வேல்! சிசிடிவி காட்சியில் பகீர்

கோவை மருதமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், வேல் கோட்டம் தியான மண்டபத்தில் இருந்த வெள்ளி வேல் மாயமானது. சாமியார் வேடத்தில் வந்த நபர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Maruthamalai murugan temple : முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை. இந்த ஆலயம் முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படுகிறது. மருதமலை கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறும் உள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் வருகிற 6ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தியான மண்டபத்தில் வேல் திருட்டு

கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் இந்த கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இந்நிலையில் மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, சுமார் 4 லட்சம் மதிப்பிலான வேல் உள்ளது.


சாமியார் வேடத்தில் திருடன்

இந்த நிலையில் நேற்று மாலை அந்த வேலை திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகளிகள் பல இடங்களிலும் தேடினர். இதனையடுத்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது  நேற்று பிற்பகல் சுமார் 12 மணி அளவில் சாமியார் வேடத்தில் வந்த ஒருவன் அந்த வேலை எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார் யார் அந்த சாமியார் என விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 

அறநிலையத்துறை மறுப்பு

இதனிடையே  கும்பாபிஷேகத்திற்காக காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பையும் போடப்பட்டு உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அறநிலையத்துறை  தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை. மேலும்,  இந்த சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!