அண்ணா பல்கலைக்கழகத்தில் இலவசமாக B.E டிகிரி.! விண்ணப்பிப்பது எப்படி? வெளியான அசத்தல் அறிவிப்பு

Published : Apr 03, 2025, 11:59 AM ISTUpdated : Apr 03, 2025, 12:15 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்பயிற்சியுடன் கூடிய இலவச பி.இ பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை குறித்து விரிவாக காணலாம்.

PREV
16
அண்ணா பல்கலைக்கழகத்தில் இலவசமாக B.E டிகிரி.! விண்ணப்பிப்பது எப்படி? வெளியான அசத்தல் அறிவிப்பு

Free B.E. degree from Anna University : பள்ளி கல்வியை முடித்த மாணவர்களுக்கு அடுத்ததாக உயர்கல்வி தான் முக்கிய அடித்தளமாக விளங்குகிறது. எனவே உயர்கல்வியில் படிக்கும் படிப்பு தான் வாழ்க்கையை நிர்ணயிக்கும். அந்த வகையில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் உயர்கல்வியில் இணைவதற்காக கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதன் படி  அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு எனும் வகையின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகங்களான கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) 

26

பி.இ, பி.டெக், பட்டப் படிப்பிற்கான இணையதள விண்ணப்பம்

குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில் நுட்பக் கல்லூரி (MIT) அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ACT) ஆகியவற்றில் பி.இ, பி.டெக், பி.பிளான் பட்டப் படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை சமர்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.  

மேலும்  அண்ணா பல்கலைக்கழகத்தில் இலவசமாக தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ளது. 

36

இலவச பொறியியல் படிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் HL Mando Anand India எனப்படும் தனியார் நிறுவனத்தின் முழு நிதி உதவியோடு எலெக்ட்ரானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப்பிரிவில் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ பட்டப்படிப்பு வழங்கப்படவுள்ளது.

  இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வகுப்புகள் மற்றும் HL Mando நிறுவனத்தில் தொழிற்பயிற்சி ஆகிய இணைந்து வழங்கப்படும்.

 

46

உதவித்தொகையோடு பட்டப்படிப்பு

மேலும்  இந்த படிப்பிற்கான முழு கட்டணமும் தனியார் நிறுவனத்தின் மூலம் ஏற்கப்படும். தொழிற்பயிற்சிக்கான உதவித்தொகையாக (stipend) மாதம் ரூ.14,500 வழங்கப்படும்.  மேலும் மாணவர்களுக்கான கவ்லி கட்டணம், அட்மிஷன் கட்டணம், விடுதி செலவு, உணவு செலவு ஆகியவை அனைத்து அந்த தனியார் நிறுவனம் செலுத்தும் 

56

விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் யார்.?

இப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும்.

மின்னணுவியல் மற்றும் கருவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்,  இயந்திர பொறியியல், மின் பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்,  ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமோ படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அரியர் வைத்திருக்கக்கூடாது.

விண்ணப்பதார்கள் 2022-23 / 2023-24 / 2024-25 ஆகிய கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

66

இலவச பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

 ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories