வானிலை: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை ஊத்தப்போகுதாம்!
நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னைக்கு மழையா?
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்திருந்தது.
இதையும் படிங்க: கோடை மழை கொட்டு கொட்டுன்னு கொட்ட போகுதாம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் மதுரை, தேனி, திருவாரூரில் பரவலாக மழை
அதன்படி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த பெய்தது. அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான திருமங்கலம் நகர், பாண்டியன் நகர், வடகரை, கரிசல்பட்டி, கற்பகநகர், காமராஜபுரம், செங்குளம் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இரவிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இன்று காலை விழுப்புரம், மதுரை, தேனி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னையில் மழை
கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் சென்னையில் பல்லாவரம், அனகாபுத்தூர், கிண்டி, எழும்பூர், போரூர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை
இதனிடையே தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.