போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவுடன் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
27
Supreme Court
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கோரியிருந்தார். அதுமட்டுமல்ல அமலாக்கத்துறை சார்பிலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், அதிகாரமிக்க அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி அமர்ந்துள்ளதால் அவரது பதவியால் வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம். அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அச்சப்படுவார்கள் என்பதால் அவருடைய ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த முறை விசாரணையில் போது செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியில் தொடர விரும்புகிறாரா? இல்லையா? என்பதை கேட்டு தெரிவிக்க அவரது தரப்புக்கு அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி: செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்கக் கூடாது என எந்தவொரு குறிப்பிட்ட உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
47
Supreme Court Vs Senthil balaji
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஜாமீன் கிடைத்து விட்டது என்பதற்காக எந்தவொரு அட்வான்டேஜும் எடுக்கக் கூடாது. நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்பதற்காக சலுகையாக எடுத்துக் கொள்வீர்களா? அமைச்சராக பதவியில் இல்லை என்றும் சாட்சிகளை கலைக்க மாட்டோம் என்றும் கூறித்தானே ஜாமீன் பெற்றீர்கள் என கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தருமாறு முகுல் ரோஹ்தகி கோரினார். இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை கேட்டு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.
67
cm Stalin
ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
77
Annamalai Vs Senthil Balaji
ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.