தமிழிசை தந்தை குமரி அனந்தன் உடல் நிலை கவலைக்கிடம்?
Senior Congress leader Kumari Ananthan: முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Senior Congress leader Kumari Ananthan: முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் தெலங்கானா ஆளுநரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் (91). வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குமரி அனந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து வேலூரில் உள்ள நருவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குமரி அனந்தனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் நருவி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவரின் சகோதரர் மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்த குமார். தற்போதைய காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்-க்கு பெரியப்பா முறை உறவு. மேலும் குமரி அனந்தனின் மகள் தமிழிசை, மருமகன் சவுந்தரராஜன் இருவருமே மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.