தமிழ்நாடு அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கில் இணையும் மாணவர்கள்; காரணம் என்ன?
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் இலவச கல்வி காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் இலவச கல்வி காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
Govt school admissions tamilnadu : கல்வி தான் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்து விளங்கும் ஆயுதமாக இருக்கும். எனவே இன்றைய காலகட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஏழை எளிய மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இலவச கல்வியானது வழங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல் பசியாற உணவு அருந்தும் வகையில் காலை மற்றும் மதிய உணவு திட்டம், இலவச பேருந்து பயண அட்டை, இலசவ மிதி வண்டி, கல்வி உதவி தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு முதல் ஆய்வகங்கள் வரை சிறந்து விளங்குகிறது.
இதனால் தனியார் பள்ளிகளில் லட்சங்களில் பணத்தை கொட்டிக்கொடுப்பதற்கு பதிலாக அரசு பள்ளியில் இலவச கல்வி கற்க மாணவர்களின் பெற்றோர்கள் விருப்பப்படுகிறார்கள். மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இது மட்டும் இல்லாமல் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அரசு பள்ளியில் வேகவேமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024- 2025ஆம் ஆண்டிற்கான பள்ளி வகுப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வானது தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையானது மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கியுள்ளது.
இதன் படி தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37,387 அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் மார்ச் முதல் தொடங்கிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு அல்லாத பிற வகுப்புகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் மாணவர்களுக்கு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கைக்கான இடங்களை நிரப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 11 வேலை நாட்களில் 78,117 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.