விடுமுறை அறிவிப்பு வந்தாச்சு! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!
School College Holiday: தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School College Holiday: தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், விநாயகர் சதுர்த்தி, புனித வெள்ளி, ரம்ஜான் உள்ளிட்ட அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சில முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் அனைத்து சனி, ஞாயிறு நாட்களில் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதுபோக கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக ஏதாவது ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க: குஷியில் பள்ளி மாணவர்கள்! கோடை விடுமுறை எத்தனை நாட்கள்? மீண்டுகள் பள்ளிகள் திறப்பது எப்போது?
அந்த வகையில் தருமபுரி மாவட்டம் தீர்த்த மலையில் பிரசித்தி பெற்ற தீர்த்த கிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மாசி மக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த தேரோட்டத்தின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டு இன்று தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டம் நடைபெறுவதையொட்டி அரூர் ஒன்றியத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தருமபுரி மாவட்டம் ஆட்சியர் ஆர். சதீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச் சட்டம் 1881 (Under instruments Act 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் உள்ளூர் விடுமுறை நாளன்று அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.