நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜூனா இணைந்தது, பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், தவெக இதனை மறுத்துள்ளது. பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TVK Adhav Arjuna : தமிழகத்தில் திமுகவிற்கு எதிராக அரசியல் களத்தில் குதித்துள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என கட்சிக்கு பெயரிட்டு மிகப்பெரிய அளவில் மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என எந்த தேர்தலும் தங்களுக்கு இலக்கு இல்லையெனவும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என தெரிவித்துள்ளார் நடிகர் விஜய், இந்த நிலையில் 2026ஆம் ஆண்டிற்கான தேர்தலை எதிர்கொள்ள கிளைச்செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
24
Aadhav Arjuna VCK
இந்தநிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்னும் அரசியல் வியூக வகுப்பு நிறுவனத்தை நடத்தி வருபவருமான ஆதவ் அர்ஜூனா, கடந்த வருடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். இவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் திமுக கூட்டணியில் பொதுத்தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டது. ஆனால் திமுக தலைமையோ பொது தொகுதி ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டது. இதன் காரணமாக அப்போதே அதிருப்தியில் இருந்த ஆதவ் ஆர்ஜூன் திமுக மீது தனது எதிர்ப்பை காட்ட தொடங்கினார். கூட்டணி ஆட்சி வேண்டும் என வலியுறுத்தினார்.
34
Aadhav Arjuna joins Actor Vijay TVK
ஒரு கட்டத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கப்பட்டார். இதனையடுத்து சில மாத காலத்தில் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜூனா, அங்கு பிரச்சார குழு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது ஏற்பாட்டின் பேரில் இப்தார் நிகழ்வு சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் தான் ஆதவ் அர்ஜூனா தவெகாவில் இருந்து இடை நீக்கம் செயப்பட்டதாக தகவல் பரவியது.
44
Aadhav Arjuna
தொலைக்காட்சி ஒன்றில் பதிவான செய்தின் ஸ்கீரின் ஸாட் பரப்பப்பட்டது. ஆனால் இந்த தகவலை தவெக மறுத்துள்ளார். இது வதந்தி எனவும், யாரோ தவறாக பரப்பிய செய்தி என கூறியுள்ளனர். தவெக சார்பாக நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாட்டை ஆதவ் அர்ஜூனா மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து ஆதவ் ஆர்ஜூனா நீக்கப்பட்டபோது வந்த கார்டை எடிட் செய்து யாரோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.