நாய்களை ஏற்றும் வண்டியில் நான் ஏற மாட்டேன்.! போலீஸ் வாகனத்தில் ஏற அடம்பிடித்த எச் ராஜா

Published : Mar 17, 2025, 01:51 PM ISTUpdated : Mar 17, 2025, 01:58 PM IST

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பாஜக அறிவித்த முற்றுகை போராட்டம் காரணமாக அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். எச்.ராஜாவை கைது செய்ய முயன்றபோது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

PREV
14
நாய்களை ஏற்றும் வண்டியில் நான் ஏற மாட்டேன்.! போலீஸ் வாகனத்தில் ஏற அடம்பிடித்த எச் ராஜா

TASMAC SCAM BJP Protest : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது பானம் தயாரிக்கும் கிடங்குகளில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் பலமுறைகேடு நடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தது. அதன் படி, போக்குவரத்து டெண்டர், பார் உரிமம் டெண்டர், பணியிடமாற்றம்,

சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமான ஆர்டர்கள், பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 அதிகமாக வசூலித்தது போன்ற குற்றங்களுக்கான ஆதாரங்களும் கிடைத்ததாக கூறப்பட்டது. மேலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

24
பாஜக தலைவர்கள் கைது

இதனையடுத்து தமிழக பாஜக சார்பாக சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் படி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே போராட்டத்திற்கு ஏற்பாடு நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாஜக தலைவர்கள் அவர்களின் வீட்டிலேயே கைது செய்யப்பட்டனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை, வினோஜ், வானதி சீனிவாசன் போன்றோர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் ராஜரத்தினம் அரங்கம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 
 

34
திமுக அரசுக்கு சவால் விடுத்த அண்ணாமலை

இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடைநடுங்கி திமுக அரசு, தமிழக பாஜக மூத்த தலைவர்களில்  மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா தமிழிசை சவுந்திரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் வினோஜ், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

 முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?  தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.

44
போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்த எச் ராஜா

இந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்து போலீசார் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்த எச் ராஜா, நாய் ஏத்துகிற வண்டியில் நான் ஏற மாட்டேன் , நாய் ஏத்துகிற வண்டியை எடுத்து வந்து இருக்கீங்க,. நான் ஏற மாட்டேன் வாக்குவாதம் செய்தார். எதற்காக கைது செய்கிறீர்கள். செந்தில் பாலாஜி கிரிமினல், கொள்ளைகாரன் அவனை கைது செய்ய மாட்டீர்கள் எங்களை கைது செய்வது ஏன் என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.  

மீண்டும் போலீசார் காவல் துறை வாகன்த்தில் ஏற்ற முயன்றபோது இந்த வண்டியில் ஏறமாட்டேன் இது நாய் ஏத்துகிற வண்டி என கூறினார். வேறு வண்டியில் தான் ஏறுவேன் என தெரிவித்ததையடுத்து  மற்றொரு வாகனத்தில் எச்.ராஜாவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories