ஈரோட்டில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னின்று நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், நடிகர் விஜயை புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் ஒப்பிட்டு, 'புரட்சி தளபதி' என்று புகழ்ந்தார்.
ஈரோட்டில் தற்போது நடைபெற்று வரும் தவெக பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை, முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டு வந்தார். அதிமுகவிலிருந்து தவெக-வில் இணைந்த பிறகு, தனது சொந்தப் பகுதியில் நடைபெறும் முதல் முக்கிய அரசியல் நிகழ்ச்சி என்பதால், இந்தப் பொதுக்கூட்டத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்த வேண்டு என்ற கட்டாயத்தில் உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதி, மைதானம் முழுவதும் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் வசதிக்காக மைதானத்தைச் சுற்றி குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தின் பாதுகாப்புக்காக 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கூட்டம் நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22
விஜயை பற்றி செங்கோட்டையன் பேச்சு
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “நாளை தமிழகத்தை ஆளப்போகும் தலைவர் விஜய். நல்ல தலைவர் வேண்டும் என்ற மக்களின் கனவு இன்று நனவாகியுள்ளது. ஆண்டுக்கு ரூ.500 கோடி மக்கள் சேவைக்காக விஜய் வந்துள்ளார். புரட்சி தலைவர் எம்ஜிஆரை அரசியலில் பார்த்துள்ளேன். இன்று புரட்சி தளபதி விஜயை பார்க்கிறேன்.
மேலும், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். பொதுக்கூட்டத்தில் கடலென திரண்டுள்ள மக்களைப் பார்த்தபோது, இது வரலாறு படைக்கும் கூட்டமாக தெரிகிறது என்றும் செங்கோட்டையன் கூறினார். நடிகர் விஷாலின் புரட்சி தளபதி பட்டத்தை விஜய்க்கு தூக்கி கொடுத்துள்ளார் செங்கோட்டையன். இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.