Seeman : எலெக்‌ஷன் ரிசல்டால் ரஜினி ரொம்ப வருத்தப்பட்டார் - சூப்பர்ஸ்டாரை சிக்கலில் சிக்க வைத்த சீமான்

Published : Oct 30, 2026, 08:25 AM IST

Seeman About Rajinikanth : சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ரஜினிகாந்த் மிகவும் வருத்தப்பட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

PREV
14
சீமான் பேச்சால் வெடித்த சர்ச்சை

தேர்தலில் தான் வெற்றி பெறாதது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த வருத்தம் தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சட்டமன்றத்திற்குள் தனது குரல் ஒலிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பொது வேட்பாளராகப் போட்டியிடுவது தொடர்பாகச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு சீமான் விரிவாகப் பதிலளித்துள்ளார்.

24
எனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்!

தன்னை நீண்ட காலமாகக் கவனித்து வருபவர்கள், தனது கருத்துகள் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று விரும்புவதாக சீமான் தெரிவித்தார். தன்மீது அன்பு கொண்ட மாற்றுக் கட்சித் தலைவர்கள், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டார். நல்ல அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், குறைந்தபட்சம் தான் ஒருமுறையாவது தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறினார்.

34
சட்டமன்றத்திற்குச் சென்றால் எனது குரலை நிராகரிக்க முடியாது!

சட்டமன்றத்திற்குள் சென்று மக்களின் பிரச்சினைகளைப் பேசும்போதுதான், தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளின் தீவிரம் அனைவருக்கும் முழுமையாகத் தெரியவரும் என சீமான் தெரிவித்தார். தான் நீண்ட காலமாக மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்தாலும், அந்தக் குரல் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதில் சில வரம்புகள் இருப்பதாகக் கூறினார். இதனை விளக்குவதற்காகக் கூண்டுக்குள் இருந்து கூவும் சேவலையும், கூரையின் மீது ஏறிக் கூவும் சேவலையும் ஒப்பிட்டு அவர் பேசினார். கூண்டுக்குள் இருந்து எழுப்பப்படும் சத்தம் எல்லா இடங்களுக்கும் சென்றடையாது. ஆனால், அதே சேவல் கூரையின் மீது ஏறிக் கூவும்போது அதன் குரலை எளிதில் புறக்கணிக்க முடியாது என்று விளக்கினார். அதேபோன்று, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது கருத்துகளை அனைவரும் கேட்டே ஆக வேண்டிய சூழல் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

44
ரஜினிகாந்த் என்னிடம் வருத்தப்பட்டார்!

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடனான உரையாடல் குறித்துப் பேசிய சீமான், தன்னுடைய தோல்வியால் அவர் வருத்தப்பட்டதாக கூறினார். இயக்குநர் பாரதிராஜா மறைவின்போது இருவரும் சந்தித்துப் பேசினார்களாம். பாரதிராஜா மறைவின் துயரத்தையும் தாண்டி தேர்தல் முடிவு பற்றி தான் ரஜினிகாந்த் மிகவும் வருத்தப்பட்டாராம். நீங்களாவது ஜெயிச்சிருக்கலாம், அதுல எனக்கு ரொம்ப கஷ்டம் என ரஜினி கூறியதாக சீமான் தெரிவித்தார். ஒருவர் தன்னிடம் பர்சனல் ஆக பேசிய விஷயத்தை சீமான் பொதுவெளியில் போட்டுடைப்பது இது முதல்முறை அல்ல, கடந்த சில மாதங்களுக்கு முன் மேடையில் பேசுகையில், சிவகார்த்திகேயன் தன்னிடம் நீங்க அரசியலை விட்டுட்டு சினிமாவுல நடிங்க, மக்கள் தேடட்டும்னு சொன்னதாக கூறி இருந்தார். இப்படி திரைப்பிரபலங்கள் தன்னிடம் பேசும் விஷயங்களை பொதுவெளியில் சீமான் லீக் செய்வது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories