தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
- தாம்பரம் – நாகர்கோவில் (வண்டி எண்: 06153): 2026 நவம்பர் 6 அன்று இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் மாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
- நாகர்கோவில் – தாம்பரம் (வண்டி எண்: 06154): மறுமார்க்கமாக, 2026 நவம்பர் 9 அன்று இரவு 9:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
நிற்கும் ரயில் நிலையங்கள்: இந்தச் சிறப்பு ரயில் பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.