மாணவர்களுக்கு ஷாக்.! கோடை விடுமுறை நீட்டிக்கப்படாது.? வெளியான முக்கிய தகவல்

Published : May 14, 2025, 10:42 AM ISTUpdated : May 14, 2025, 02:54 PM IST

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால், வெப்பம் குறைய வாய்ப்புள்ளதாகவும், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

PREV
14
கோடை வெயிலும்- பள்ளிகள் திறப்பும்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் வேளைகளில் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை நீடிக்கிறது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறார்கள். 

தற்போது அக்னி வெயில் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் எப்போது வெயில் தாக்கம் குறையும் என மக்கள் காத்துள்ளனர். அந்த வகையில் தற்போது வெப்ப சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழையானது பெய்து வருகிறது. இருந்த பொதும் பகல் வேளைகளில் அனல் காற்று வீசுகிறது.

24
முன் கூட்டியே தொடங்கிய பருவமழை

தமிழகத்தை பொறுத்த வரை ஜூன் அல்லது ஜூலை மாதம் தான் வெயிலின் தாக்கம் குறையும். எனவே அதுவரை வெப்பம் உச்சத்திலேயே இருக்கும். ஆனால் இந்தாண்டு தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கியுள்ளது. எப்போது மே மாதம் இறுதியில் தொடங்கும் பருவமழை அந்தமான் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. 

குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் மழையானது ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து கேரள எல்லையோர மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வெப்பம் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

34
வெப்பத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா.?

இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. தனியார் பள்ளிகள்ல ஜூன் 9ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவித்துள்ளது. எனவே வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு ஒவ்வொரு வருடமும் ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிப்போகும்.

எனவே இந்தாண்டும் பள்ளிகள் திறப்பு ஜூன் 2ஆம் தேதியில் இருந்து ஜூன் 10 அல்லது 13ஆம் தேதிக்கு தள்ளி போகும்  என மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் காத்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல வெளியூர் பயண திட்டத்தையும் அமைத்துள்ளனர்.

44
திட்டமிட்டபடி பள்ளிகளை திறக்க திட்டம்

இந்த சூழ்நிலையில் தென்மேற்கு பருவமழை சீக்கிரமாகவே தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இருந்த போதும் மே மாதம் 25ஆம் தேதிக்கு பிறகே தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories