அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதி ஆகிய 2 நாட்கள் தமிழக அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர், குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து, விழாவில் கலந்துகொள்ளும் வகையில், 3ம் தேதி (ஆடி மாதம் 18-ஆம் நாள்) சனிக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.