பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உஷார்! அலறியபடி எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை! நடந்தது என்ன?

Published : Jan 24, 2025, 06:42 PM IST

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

PREV
15
பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உஷார்! அலறியபடி  எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை! நடந்தது என்ன?
School Student

தமிழகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயாக்கப்பட்ட பிறகு பல்வேறு மோசடி தொடர்பான செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பணத்தை இழந்த பொதுமக்களே அதிகம். இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு விதமான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. 

25
students scholarship fraud

குறிப்பாக எஸ்சி/எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தரவுகள் மற்றும் வங்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த துறைகள் மூலம் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

35
Scam Alert

இந்நிலையில், இதனை பயன்படுத்தி கடந்த சில நாட்களாக மோசடி கும்பல்  அறிமுகம் இல்லாத மொபைல் எண்ணில் இருந்து மாணவர்களின் பெற்றோர்களை தொடர்புக் கொண்டு மாணவியின் மற்றும் பெற்றோரின் பெயரை சரியாக கூறி உங்கள் மகளுக்கு உதவித்தொகை வந்துள்ளதாகவும் அதனை ஜி பே, போன் பேவில் அனுப்புவோம் எனவும் வங்கி கணக்கின் விவரத்தையும் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

45
school education department

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது செல்போனில் அழைத்து கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, வங்கி கணக்கு மற்றும் ஒடிபி கேட்கும் நபர்களை நம்ப வேண்டாம். 

55
scholarship scam alert

அரசு பள்ளிகளில் வழங்கும் கல்வி உதவித்தொகையானது எஸ்சி/எஸ்டி, பிசி, எம்பிசி நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே மாணவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. ஜி பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் உதவித்தொகை அனுப்பப்படாது. எனவே ஜி பே, போன் பேயில் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடி அழைப்புகளே என விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories