பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. முழு ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம்..

Published : Apr 03, 2026, 06:17 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா முன்னிட்டு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

PREV
15

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

25

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பள்ளி கட்டிடங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்படவுள்ளதை அடுத்து கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படாத வகையில் முழு ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16ம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

35

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 6-ம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ளது.

45

இந்த தேரோட்டதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

55

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஏப்ரல் 6ம் தேதி திங்கள் கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியின்படி ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories