பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போது, வெப்பநிலையை 'டிகிரி செல்சியஸ்' என்று கூறுவதற்குப் பதிலாக, மழையின் அளவை அளவிடும் 'சென்டிமீட்டர்' என்ற வார்த்தையை அமைச்சர் அடுத்தடுத்துப் பயன்படுத்தினார். வெயிலின் அளவை சென்டிமீட்டரில் அவர் குறிப்பிட்டது அங்கிருந்த செய்தியாளர்களிடையே சற்றே வியப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
நெட்டிசன்கள் விமர்சனம்
பள்ளிகள் திறப்பு தேதி உறுதியானதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதியடைந்தாலும், மூத்த அமைச்சரான செங்கோட்டையன் வெப்பநிலை அளவீட்டில் காட்டிய இந்தக் குழப்பம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. "வெயிலை சென்டிமீட்டரில் அளக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என அமைச்சரின் வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.