School Holidays: பள்ளிகளுக்கு அடுத்த வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை.. மாணவர்கள் குஷியோ குஷி!

Published : Jun 20, 2026, 08:46 AM IST

School Holidays: தமிழகத்தில் பள்ளிகளுக்கு அடுத்த வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மாணவர்கள் குஷியாகியுள்ளனர். எந்தெந்த நாட்களில் விடுமுறை? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

PREV
14
தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் சுமார் ஒன்றரை மாதங்கள் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 4 ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன. ஜூன் 1 ஆம் தேதியே (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று 4 ஆம் தேதி திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. பள்ளிகள் திறந்து சில நாட்களே ஆன நிலையில், அடுத்து எப்போது விடுமுறை (School Holidays) கிடைக்கும்? என மாணவர்கள் காலாண்டரில் தேட ஆரம்பித்து விட்டனர்.

24
பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

இந்த நிலையில், மாணவர்களுக்கு ''கண்ணா லட்டு திங்க ஆசையா'' என்பது போல் அடுத்த வாரம் 3 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வர உள்ளது. அதாவது தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட 2026-27 நாட்காட்டியின் படி ஜூன் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை வருகிறது. 

அன்றைய நாள் பொது அரசு விடுமுறை (அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை) என்பதால் பள்ளிகளுக்கும் விடுமுறை ஆகும். இதே போல் ஜூன் 27 ஆம் தேதி (சனிக்கிழமை), ஜூன் 28ம் ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களும் விடுமுறை என்பதால் மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

34
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் விடுமுறை பட்டியல்

அடுத்த வாரம் 3 நாட்கள் அடுத்தடுத்து விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் குஷியில் துள்ளிக்குதிக்க ஆரம்பித்துள்ளனர். ஆசிரியர்களும் உற்சாகமடைந்துள்ளனர். அடுத்த வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்தாலும், ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள் கொத்தாக விடுமுறை நாட்கள் ஏதும் இல்லை. ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் சனிக்கிழமை அன்று வருவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மிலாடி நபி ஆகஸ்ட் 26 ஆம் தேதி (புதன்கிழமை) வருவதால் அன்று ஒருநாள் லீவு மட்டும் கிடைக்கிறது.

44
சனிக்கிழமைதோறும் பள்ளிகளுக்கு விடுமுறை

அதே வேளையில் செப்டம்பர் மாதத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அதாவது செப்டம்பர் 4 (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி, அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் செப்டம்பர் 5 (சனிக்கிழமை), செப்டம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கிறது. 

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பள்ளி நாட்காட்டியின்படி 2026-27 காலாண்டில் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக இருக்கும் நிலையில், இதில் 22 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. மேலும் பள்ளி நாட்காட்டியின்படி இனி சனிக்கிழமைதோறும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளதால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories