மாணவர்களுக்கு 2 லட்சம் கல்வி உதவித்தொகையை அள்ளிக்கொடுக்கும் அரசு.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு

Published : Sep 04, 2025, 11:05 AM IST

தமிழக அரசு, மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

PREV
14
கல்வி உதவித்தொகை

கல்விக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் கல்வி உதவித்தொகை சார்ந்த திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் தமிழ்நாடு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

24
தகுதிகள் என்ன.?

தகுதிகள் :

தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2.50 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

படிப்பிற்கான காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

கல்வி நிறுவனங்ளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ 2 லட்சம் அல்லது அதற்கு குறைவாக வழங்கப்படும்.

12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்

34
விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கும் முறை :

கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து கல்வி கட்டண ரசீதுகளுடன் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இன மாணவ/மாணவியர்களின் விண்ணப்பத்தினை உரிய பரிந்துரையுடன் முகவரிக்கு பிற்படுத்தப்பட்டோர் தனியாகவும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் தனியாகவும் அனுப்பவும்.

https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarship_schemes புதியது (Fresh) மற்றும் புதுப்பித்தலுக்கான(renewal) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

44
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையர்

பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் எழிலகம் இணைப்பு கட்டடம் 2 வது தளம் சேப்பாக்கம், சென்னை-5

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் :

தொலைபேசி எண்: 044-29515942,

மின்னஞ்சல் : tngovtiitscholarship@gmail.com

மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம்:

: 044-28546193,

: mbcdnciitscholarship@gmail.com.

மேலும் விவரங்களுக்கு :

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகங்களை அணுகவும்.

Read more Photos on
click me!

Recommended Stories