விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் வேளாண் மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை மானியத்தில் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் உட்பட பலரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, அவர்களின் உற்பத்தி விளைபொருட்களுக்கு சந்தையில் கூடுதல் மதிப்பு கிடைக்கச் செய்யும் நோக்கில், தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பல்வேறு வேளாண் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50% வரை மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
தமிழக அரசு சிறு, குறு தொழில்களுக்கு இயந்திரங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஆதி திராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு தொழில் தொடங்கும் வாய்ப்பு பெருகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
24
மானியத்தின் முக்கிய அம்சங்கள்
மானியத்தின் முக்கிய அம்சங்கள்
சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகள் – மொத்த விலையின் 50% வரை மாணியம் பெறுவர்.
பொது விவசாயிகள் – மொத்த விலையின் 40% வரை மாணியம் பெறுவர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிள்ளைகள் – மேற்கண்ட விகிதத்துக்கு மேலாக 20% கூடுதல் மாணியம் பெறுவர்.
34
மானியத்தில் வழங்கப்படும் இயந்திரங்கள்
எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு
தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம்
நெல் உமி நீக்கும் இயந்திரம்
மாவரைக்கும் இயந்திரம்
பருப்பு உடைக்கும் சிறிய இயந்திரம்
தேயிலை பறிக்கும் கருவி
மிளகாய் பொடியாக்கும் இயந்திரம்
நிலக்கடலை தோல் உடைத்து தரம் பிரிக்கும் இயந்திரம் போன்ற இயந்திரங்களுகுக மானிய உதவி வழங்கப்படுகிறது.
விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக QR கோட் ஸ்கேன் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எளிமையான முறையில் பதிவு செய்து, இயந்திரங்களை மானியத்தில் பெறலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய காலம்
தொடக்கம்: 19 ஆகஸ்ட் 2025
முடிவு: 20 செப்டம்பர் 2025
“விவசாயிகள் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி திறனை மேம்படுத்தலாம். அதோடு, விளைபொருட்களை மதிப்புக் கூட்டி சந்தையில் அதிக விலையில் விற்கும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த மாணியத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில் பெரும் துணை புரியும்” என்று கூறப்பட்டுள்ளது.