ரூம் போட்டு இரவு முழுவதும் காத்திருந்த ஓபிஎஸ்.! ஷாக் கொடுத்த அமித்ஷா

Published : Apr 11, 2025, 10:13 AM IST

தமிழகத்தில் அதிமுக கூட்டணி இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. அமித்ஷா வருகை ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க முயற்சித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி உறுதியாக மறுத்துவிட்டார். இதனால் கூட்டணி அமைவதில் சிக்கல் நீடிக்கிறது.

PREV
14
ரூம் போட்டு இரவு முழுவதும் காத்திருந்த ஓபிஎஸ்.! ஷாக் கொடுத்த அமித்ஷா

Tamilnadu Dmk and Admk alliance : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காத்துள்ளனர். அந்த வகையில் இன்னும் சரியாக 365 நாட்களுக்குள் தேர்தலை நடைபெறவுள்ளது. எனவே ஆட்சி அதிகாரத்தை பறிக்க அரசியல் கட்சிகள் களம் இறங்கியுள்ளது.

இதன் படி ஆளுங்கட்சியாக உள்ள திமுக 200 தொகுதிகளில் வெற்றி இலக்காக வைத்து காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பிரச்சனைகள் பல இருந்தாலும் தங்கள் அணியில் உள்ள கூட்டணி கட்சிகள் விட்டுக்கொடுக்காமல் சமாதானப்படுத்தி கூட்டணியை தக்க வைத்து வருகிறது.

24
ADMK BJP alliance

திணறும் அதிமுக கூட்டணி

ஆனால் அதிமுக கூட்டணியோ இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. இந்தநிலையில் பலம் பொருந்திய திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவும் பெரிய அளவிலான கூட்டணியை அமைக்க திட்டம் வகுத்துள்ளது. இதன் படி பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, ஐஜேகே ஆகிய கட்சிகளை இணைத்து கூட்டணியை உருவாக்கப்படவுள்ளது. இதன் முதல்கட்டமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது.

34
Amit Shah Chennai visit

ஒருங்கிணைந்த அதிமுக

ஆனால் அதிமுகவின் தலைவர்கள் தனி தனி அணியாக உள்ளதால் வாக்குகள் பிரியும் நிலை உள்ளது. எனவே ஒன்றிணைந்த அதிமுகவே வெற்றியை தரும் என பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஆனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துவிட்டார். இந்த சூழ்நிலையில் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். எனவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அழைத்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

44
OPS vs EPS

காத்திருந்த ஓபிஎஸ்

இதற்காக ஓ.பன்னீர் செல்வம், அமித்ஷா தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியதாகவும், ஆனால் எந்த வித அழைப்பும் ஓபிஎஸ்க்கு விடுக்கவில்லையென அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஏற்றார் போல அமித்ஷாவை சந்திக்க திட்டமா.? என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், எல்லாம் இறைவன் கையில் என கூறி நழுவி சென்றார். 

Read more Photos on
click me!

Recommended Stories