திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள திடீர் மோதலால் அறிவாலயம் தகதகத்துக் கிடக்கிறது. இந்த மோதலால் தென் மண்டல திமுகவினர் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
டெல்லி அரசியலை விட்டு, தமிழக அரசியலுக்குள் கோலோச்ச நினைக்கும் கனிமொழி தலைமையில் தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கனிமொழி தென்மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார், இவர் தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு கட்சியின் உள்குத்து விவகாரங்களை முடிவு கொண்டு வருகிறார். இது மட்டுமல்ல பூத் ஏஜெண்டுகளை சந்திப்பது வரை அனைத்து பணிகளையும் இரவு, பகலாக செய்து ஓடாக உழைத்து வருகிறார்.
24
பாடாய் படுத்தும் சபரீசன்
தென் மண்டலத்திற்கு தற்பொழுது கனிமொழி தலைமை தாங்குவதால் திமுக தொண்டர்கள் அனைவரும் அவருடைய தலைமையில ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். தங்களுடைய பிரச்சனைகளை அவரிடம் தெரிவித்து தீர்வு கண்டு வருகின்றனர். தொகுதி வாரியாக கூட்டங்கள் நடத்தி கட்சியை பலப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தற்போது தென் மண்டலங்களுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவரும் தனியாக தொகுதி வாரியாக கூட்டங்கள் போட்டு நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வருகிறார்.
34
சபரீசனின் திடீர் விசிட்
அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அவர்களுக்கு வழிகாட்டி போல சில ஆலோசனைகளையும் தெரிவித்து வருகிறார். ஏற்கனவே கனிமொழி தலைமையில் தென்மண்டல திமுக இயங்கி வரக்கூடிய நிலையில் திடீரென சபரீசன் எதற்காக இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்? என தென் மண்டல திமுகவினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் கனிமொழியின் செயல்பாடுகளில் சபரீசன் தலையிடுவதை விரும்பவில்லை. சபரீசன் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தென் மண்டல திமுகவில் மீண்டும் குழப்பங்கள் ஏற்படும் என கொந்தளிக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அனுமதி இல்லாமல் சபரீஷன் எப்படி இந்த சுற்றுபயணத்தையும், ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.
இதனால், மாநில அரசியலுக்கு வருவதை ஸ்டாலின் விரும்பவில்லையா? கனிமொழி ஓரங்கட்டப்படுகிறாரா? என அவரது ஆதரவாளர்கள் பிபி எகிற குமுறுகின்றனர். கனிமொழியின் பொறுப்புக்கு எதிராக சபரீசன் செயல்படுவதாக திமுகவினரிடையே குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.