மாணவிகளை புகைப்படம் எடுக்க தடை.! மீறினால் அவ்வளவு தான்- பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

Published : Jul 04, 2025, 12:12 PM IST

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியூர் செல்லும்  வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

PREV
15
பள்ளியில் பாதுகாப்பு வழிமுறைகள்

பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அவ்வப்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் உடல், மன, மற்றும் உணர்ச்சி நலனை உறுதிப்படுத்துவதற்காக மிகவும் முக்கியமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளி கட்டிடங்கள் தரமான கட்டுமான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தீயணைப்பு உபகரணங்கள், அவசர வெளியேறும் வழிகள் அமைப்புகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் முதலுதவி பெட்டி மற்றும் பயிற்சி பெற்ற முதலுதவி பணியாளர் இருக்க வேண்டும். பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்கள் RTO விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஓட்டுநர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் உரிமம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

25
சிசிடிவி கேமரா உறுதி செய்ய வேண்டும்

பள்ளி வளாகத்தில் CCTV கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் இருப்பது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு மன அழுத்தம், பயம், அல்லது மனநல பிரச்சனைகளை எதிர்கொள்ள ஆலோசகர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் இருக்க வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளை விளையாட்டு போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்காக வெளியூர் அழைத்து செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

35
மாணவிகள் விளையாட்டு பயிற்சி

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முறையாக பின்பற்ற‌ வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கான குறைந்தப்பட்ச தரநிலை, போதுமான, தரமான விளையாட்டு உபகரணங்கள், அனைத்து இடங்களிலும் சுத்தமான தரைகள், கழிப்பறைகள் மற்றும் மைதானங்களின் சரியான பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும், 

பிரகாசமான விளக்குகளுடன் போதுமான சுகாதாரமான கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்யவும். பள்ளிகளில் சரியான தண்ணீர் வசதிகள் இருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு கழிப்பறையிலும் ஒரு வாளி, குவளை, மூடிய குப்பைத் தொட்டி மற்றும் சானிட்டரி நாப்கின்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த ஒரு எரியூட்டி இருக்க வேண்டும்.

45
மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு வசதி

மாணவ, மாணவிகள் ஆடை அணியும் அறை மற்றும் ஓய்வு அறையின் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும், அந்த வகையில்  திரையுடன் கூடிய மூடிய ஜன்னல்கள், சரியான கதவு தாழ்ப்பாள்கள் மற்றும் துணிகளுக்கான ஹேங்கர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளில் போதுமான சுகாதாரப் பொருட்கள் கிடைப்பதையோ அல்லது விற்பனை இயந்திரங்களையோ உறுதி செய்தல். ஒரு குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றம் குறித்து அறிந்த எந்தவொரு நபரும் அதாவது பயிற்சியாளர்கள், ஊழியர்கள் அல்லது அணி வீரர்கள் உட்பட மற்றவர்கள் காவல்துறை அல்லது சிறப்புப் பிரிவுக்கு புகாரளிக்க வேண்டும். புகாரளிக்கத் தவறினால் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

55
மாணவிகளை புகைப்படம் வீடியோ எடுக்க தடை

மேலும் மாணவ, மாணவிகள் தங்குமிடங்கள், ஓய்வு அறை நடைபாதை, உடை மாற்றும் அறை, பொது அரங்குகள், தொலைக்காட்சி அறைகள், நடைபாதை மற்றும் பிற தேவையான பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும். பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு பொருத்தமான உணவுத் திட்டங்களை வழங்குவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சி மேற்கொள்ளும் போது வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கக் கூடாது.

போதுமான முதலுதவி பெட்டி கிடைப்பதை உறுதி செய்யவும். அனைவருக்கும் போதுமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள் மாணவர்களுக்கும் அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் பொறுப்பான ஆசிரியர்களுக்கும் கலந்துரையாடலை மூடிய அறைகள் அல்லது மறைவான பகுதிகளில் மாணவர்களுடன் எந்த கலந்துரையாடலையும் நடத்த வேண்டாம் என்று பள்ளிகள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories