ஆபாச சர்ச்சை - ரவுடி பேபி சூர்யா
சமூக வலை தளமான டிக்டாக் மூலம் பிரபலமானவர் சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா, இவர் சினிமா பாடல்களுக்கு நடனமாடியும், வசனங்களையும் பேசியும் பிரபலமடைந்தார். அதைவிட ஆபாச பேச்சு, ஆபாச செயல்கள் போன்றவற்றால் பார்வையாளர்களை ஈர்க்க ஆரம்பித்தார். இவரது வீடியோவால் குழந்தைகள் மன நிலை பாதிக்கப்படுவதாகவும் எனவே இவரது ஆபாச தளங்களை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. காவநிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
குண்டர் சட்டத்தில் கைது
ஆனால் யார் பேச்சையும் கேட்காமல் ஆபாச வீடியோக்களை பதிவிட்டது மட்டுமில்லாமல் சமூக வலைதளத்தின் நேரலையிலேயே மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக அவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கடந்த ஆண்டு ரவுடி பேபி சூர்யாவையும், அவரது காதலர் சிக்கா என்ற சிக்கந்தரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
rowdy baby suriya
திருந்தி வாழ்வதாக வீடியோ
ஒரு வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்தவர்கள் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்தனர். வெளியே வந்த நிலையில் இனி இது போன்ற தவறான செயலில் ஈடுபடமாட்டேன் என கூறி திருந்தி வாழப்போவதாக தெரிவித்தார். ஆனால் ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல மீண்டும் தனது ரவுடிசத்தை தொடங்க ஆரம்பித்தார்.
x
அடங்காத ரவுடி பேபி
மதுரை கான்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா, இவர் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை என்பதை நடத்தி வருவதுடன் அதன் பெயரில் மக்கள் பார்வை என்ற Youtube channel ஒன்றையும் நடத்திவருகிறார். இந்நிலையில் சித்ராவிற்கு யூடியுப்பர்களான சுப்புலட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா என்ற சிக்கந்தர் என்கிற சிக்கா மற்றும் சூசைமேரி, ஹரிகுமார் ஆகிய 4 பேரும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது அந்தரங்க புகைப்படத்தை வெளியிடபோவதாகவும் மிரட்டிவருவதாக கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
மிரட்டல் விடுத்த சிக்கா
மேலும் தன்னை சிக்கா தனது யூடியும் சேனலில் Pepsi பெரியம்மா, கொரில்லா என கேலி செய்து சிக்கா வீடியோ வெளியிட்டதாகவும் புகார் கூறியுள்ளார். சிக்கந்தர் தன்னை மிரட்டியபோது என்னிடம் உள்ள துப்பாக்கிக்கு யாரும் கணக்கு கேட்க முடியாது சைரன் வைத்த வண்டியில் வந்து சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன் என ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
x
காவல்நிலையத்தில் புகார்
இந்நிலையில் சித்ரா அளித்த காவல் ஆணையர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி சுப்புலட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் என்கிற சிக்கா மற்றும் சூசைமேரி, ஹரிகுமார் ஆகிய 4 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். இதனையடுத்து நான்கு பேரையும் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் ரவுடிபேபி சூர்யா மற்றும் சிக்காவை மதுரையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.