நடிகையாக இருந்து தமிழக முதல்வராக உயர்ந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு இது. அவரது கல்வி, கலைத்திறன், திரைப்பட வாழ்க்கை மற்றும் அரசியல் பிரவேசம் குறித்த அபூர்வமான தகவல்களை இந்த கட்டுரை விவரிக்கிறது.
தமிழக அரசியலிலும், தென்னிந்திய திரைப்பட உலகிலும் மறக்க முடியாத பெயர் ஜெயலலிதா. “அம்மா” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அவர், நடிகையிலிருந்து முதல்வராக உயர்ந்த அபூர்வமான பெண்ணாக திகழ்ந்தார். இன்று அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வேளையில், அவரது வாழ்க்கைப் பயணத்தையும், அவரைப் பற்றிய அபூர்வமான தகவல்களையும் சுருக்கமாக பார்ப்போம்.
ஜெயலலிதா 1948 பிப்ரவரி 24 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் மேல்கோட்டையில் பிறந்தார். பிறந்தபோது அவருக்கு கோமளவல்லி என்ற பெயர் சூட்டப்பட்டது. ஒரு வயதுக்கு பிறகு “ஜெயலலிதா” என்ற பெயர் நிலை பெற்றது.
25
தமிழக முதல்வர் ஜெயலலிதா
சென்னையில் உள்ள சேக்ரட் ஹார்ட் பள்ளியில் கல்வி கற்ற அவர், படிப்பில் மிகுந்த திறமையாளராக விளங்கினார். உயர்கல்விக்கு உதவித்தொகை பெறும் அளவுக்கு சிறந்த மாணவியாக இருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பாரதநாட்டியம், மேற்கத்திய இசை, பியானோ போன்ற கலைகளிலும் பயிற்சி பெற்றார். மூன்று வயதிலேயே பாரதநாட்டியம் கற்றது குறிப்பிடத்தக்கது.
35
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு
1960ஆம் ஆண்டு மயிலாப்பூரில் நடைபெற்ற ஒரு நடன நிகழ்ச்சியில் அவர் முதல் மேடை அரங்கேற்றம் செய்தார். அங்கு இருந்த நடிகர் சிவாஜி கணேசன் அவரை திரைப்படத்திற்கு வருமாறு ஊக்குவித்ததாக கூறப்படுகிறது.
13 வயதில் திரைப்பட உலகில் அறிமுகமானார். “சின்னடா கோம்பே” என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக நடித்தார். சுமார் 30 ஆண்டுகள் நீண்ட நடிப்பு வாழ்க்கையில் 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உடன் 28 படங்களிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 17 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்.
1965 முதல் 1980 வரை அதிக சம்பளம் பெற்ற நடிகையாக இருந்தார். வெள்ளிவிழா படங்களில் அதிக சாதனை படைத்த நடிகை என்ற பெருமையும் அவருக்கு உண்டு. 1972ல் “கலைமாமணி” விருது பெற்றார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
திரைப்படத்திலிருந்து அரசியலுக்கு வந்த ஜெயலலிதா, 1989ல் அதிமுக என்ற கட்சியின் தலைவரானார். 1991 முதல் 2016 வரை மொத்தம் ஆறு முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார்.
55
ஜெயலலிதா வாழ்க்கை தகவல்கள்
1995ல் தத்தெடுத்த மகன் சுதாகரன் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்தியது அப்போது பேசுபொருளானது. அந்த விழாவில் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
2016 டிசம்பர் 5ஆம் தேதி அவர் மறைந்தாலும், “அம்மா” என்ற பெயரில் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் ஆளுமையாக ஜெயலலிதா என்றும் நினைவில் வாழ்கிறார்.